×

அறுவடைக்கு தயார்; நிலையில் சோளக்கதிர்கள்

சின்னாளபட்டி: கன்னிவாடி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் வெள்ளை சோளப் பயிர்கள் உள்ளன. மாட்டுக்கு தீவனமாக சோளத்தட்டைகளை பயன்படுத்துவதால் சோளம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் சோளப்பயிர் உணவு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் சோளப்பயிரை தானியங்களுக்காகவும் கால்நடை தீவனங்களுக்காகவும் பயிரிட்டு வருகின்றனர். தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படும் வெள்ளைச்சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும், அதைவிட கூடுதல் சத்துக்களை கொண்ட உணவுப் பொருளாகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி இருப்பதால் ஒரு சிலர் தினசரி ஒருவேலையாவது சோளப்பயிரை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். கன்னிவாடி அருகே ராமலிங்கம்பட்டி, மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வெள்ளைச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கிளிகள் மற்றும், குருவிகள், மைனாக்களிடமிருந்து சோளப்பயிரை காப்பாற்ற விவசாயிகள் பல உத்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் சோளப்பயிர்கள் காற்றுக்கு ஆடும் காட்சி அந்த வழியாக செல்வோரை வெகுவாக கவர்ந்து வருகிறது….

The post அறுவடைக்கு தயார்; நிலையில் சோளக்கதிர்கள் appeared first on Dinakaran.

Tags : Chinnanapatti ,Kanniwadi ,
× RELATED கன்னிவாடி சந்தையில் ஆடுகளுக்கு போதிய...